2018-03-24 16:06:00

நாடுகள் வெவ்வேறு, இளையோர் பிரச்சனையோ பொதுவே


மார்ச்,24,2018. இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்ற கூட்டத்திற்கான தயாரிப்பாக, இவ்வாரம் வத்திக்கானில் இடம்பெற்ற இளையோர் சந்திப்பில் திரட்டப்பட்ட பரிந்துரைகள், இச்சனிக்கிழமையன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன‌.

உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர், கர்தினால் இலொரென்சோ பல்த்திசேரி அவர்கள், தயாரிப்புக் கூட்டத்தின் தீர்மானங்களை எடுத்துரைக்க, இப்பத்திரிகையாளர் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட நான்கு இளையோர் பிரதிநிதிகளுள் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து இளையோர் பிரதிநிதியாக இத்தயாரிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட Percival Holt என்பவர், பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், எந்த கண்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், இளையோரின் பிரச்சனைகள் ஓரளவு பொதுவாகவே இருப்பதாகவும், இன்றைய இளையோரின் பிரச்சனைகளுக்கு உடனடி கவனிப்புத் தேவைப்படுவதாகவும் எடுத்துரைத்தார்.

உண்மை நிலைகளுக்கும் இளையோரின் கனவு உலகுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்ட வரும் இன்றைய சூழலில், வேலை, கல்வி, தொழில் நுட்பம், மேலோட்டமான உறவுகள் போன்றவை இளையோருக்கு கடும் சவால்களை முன்வைக்கின்றன எனவும் கூறினார் இந்திய இளைஞர் Percival Holt. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.