சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

சிலுவையை அவமானமாக கருதாமல் இருக்க கற்றுத்தாரும்

சிலுவை வடிவில் குருத்தோலை - AP

26/03/2018 17:02

மார்ச்,26,2018. 'கிறிஸ்துவே! உம் சிலுவையை ஒருபோதும் அவமானமாகக் கருதாமல் இருக்க எமக்குக் கற்றுத்தாரும்' என இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'தூய ஆவியாரின் அருளால் புதுப்பிக்கப்பட்ட இதயங்களுடன் உயிர்ப்பு விழாவைச் சிறப்பிக்க, இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து புனித வாரத்தில் நாம் நுழைகிறோம்' என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஞாயிறு திருப்பலிக்குப்பின், இளையோர் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, அண்மையில் இடம்பெற்ற உலக ஆயர் மாமன்றத் தயாரிப்புக் கூட்டத்தின் அறிக்கையை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தனர்.

இந்த இளையோர் பிரதிநிதிகளின் சார்பாக, பானாமா நாட்டு இளையோர் ஒருவர் திருத்தந்தையின் முன்னிலையில் உரையாற்றினார்.

2019ம் ஆண்டு, சனவரி மாதம், 34வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் பானமா நாட்டில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/03/2018 17:02