சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

சைபீரியா தீ விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தையின் செபங்கள்

கெமெரோவோவின் தீவிபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி - REUTERS

26/03/2018 16:39

மார்ச்,26,2018. சைபீரியாவின் கெமெரோவோவின் (Kemerovo), பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தோருக்கும், இத விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்த விபத்தில் இறந்த குழந்தைகளை, இறைவனின் கரத்தில் திருத்தந்தை ஒப்படைக்கிறார் என்று கூறியுள்ளார்.

மார்ச் 25, இஞ்ஞாயிறு மாலை 5 மணியளவில், கெமெரோவோ எனுமிடத்தில், Winter Cherry என்ற மையத்தின் மேல் மாடியில் துவங்கிய தீயினால், 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பலர் குழந்தைகள் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இன்னும் காணாமற்போன 10 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இந்த விபத்திற்கான காரணங்கள் ஆய்வு செய்யபப்டுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/03/2018 16:39