சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

வன்முறைகளை மீண்டுமொருமுறை வன்மையாக கண்டிக்கும் திருத்தந்தை

Carcassonne துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு அஞ்சலி - AP

26/03/2018 16:48

மார்ச்,26,2018. பிரான்ஸ் நாட்டின் Caracassonne மற்றும் Trebes ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் உயிரிழந்தவரகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறைத் தாக்குதல்களுக்கு பலியானவர்களை இறை இரக்கத்தில் ஒப்படைக்கும் அதேவேளை, மக்களைக் காப்பாற்றும் பணியில் தன் உயிரை இழந்த காவல்துறை அதிகாரி Arnaud Beltrame அவர்களை சிறப்பான விதத்தில் நினைவு கூர்வதாக, தன் தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இத்தகைய வன்முறை நடவடிக்கைகளுக்கு மீண்டுமொருமுறை தன் கண்டனத்தை வெளியிடும் அதேவேளை, அமைதி எனும் கொடைக்காக இறைவனை வேண்டுவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வெள்ளியன்று Caracassonne என்ற இடத்தில் காரில் இருந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அக்காரை கடத்திச் சென்ற 26 வயது Radouane Lakdim என்ற பிரெஞ்ச்-மொரோகன் இளைஞர், Trebes என்ற இடத்திற்கு அருகிலுள்ள பல்பொருள் அகங்காடியிலும் நுழைந்து, ''அல்லாகு அக்பர்' என சப்தமிட்டு தாக்குதல் நடத்தியதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

26/03/2018 16:48