ஏப்.02,2018. இறைவனோடு இணைந்திருக்கும்போது, நாம் எதையும் இழப்பதில்லை, என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'காலியாக இருக்கும் இயேசுவின் கல்லறை குறித்து நாம் தியானிக்கும் வேளையில், இறைவனோடு ஒன்றித்திருக்கையில் நாம் எதையும் இழப்பதில்லை, என்ற நம் உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பிப்போம்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அழைப்பு விடுக்கிறது.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
சமூக வலைத்தளங்கள்: