சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தை : உயிர்த்த இயேசுவின் அமைதி நமக்கு கிட்டுவதாக‌

வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை - ANSA

03/04/2018 15:31

ஏப்.03,2018. உயிர்த்த இயேசு நமக்கு அமைதியை வழங்குவாராக, என்ற மையக் கருத்துடன் இச்செவ்வய்க்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'பாவம் மற்றும் மரணத்தின் இருளை வெற்றிகண்ட கிறிஸ்து, இந்நாட்களில் நமக்கு அமைதியை அருள்வாராக' என்பதாக திருத்தந்தையின் செவ்வாய் தின டுவிட்டர் செய்தி உள்ளது.

மேலும், இவ்வியாழனன்று வத்திக்கான் தோட்டத்தில் Narek நகரின் புனித கிரகோரி அவர்களின் வெண்கலச்சிலை ஆசீர்வதிக்கப்பட்டு நிறுவப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இந்த நிகழ்வில், அர்மேனிய அரசுத் தலைவர் Armeno Serzh Sargsyan, அர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை 20ம் Krikor Bedro, மற்றும், ஏனைய சில முதுபெரும் தந்தையர்களும் கலந்துகொள்ள உள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/04/2018 15:31