சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை - இளையோரின் சக்தி மீது நம்பிக்கை

2014ம் ஆண்டு, நொபெல் அமைதி விருதைப் பெற்ற மலாலா மற்றும் கைலாஷ் - RV

07/04/2018 13:35

"இளையோரின் சக்தி என்பது, இவ்வுலகிற்கு கிடைத்துள்ள பொதுச்சொத்து. இளையோரின் முகங்களில், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களும் வெளிப்படுகின்றன. மனித சமுதாயத்தின் வேறு எந்த பிரிவினருக்கும் இல்லாத அளவு, இளையோர் என்ற குழுவினரின் சக்தி, கொள்கை வேட்கை, ஆர்வம், துணிவு ஆகியவை உயர்ந்துள்ளன."

இளையோரைக் குறித்து நம்பிக்கை தரும் இச்சொற்களைக் கூறியவர், கைலாஷ் சத்யார்த்தி அவர்கள். குழந்தைகளின் உரிமைகளுக்காகப் பணியாற்றிவரும் சத்யார்த்தி அவர்கள், 2014ம் ஆண்டு, நொபெல் அமைதி விருதைப் பெற்றார். பாகிஸ்தானிலும், உலகின் பிற நாடுகளிலும் பெண்கல்விக்கென போராடிவரும், இளம்பெண் மலாலா யூசப்சாய் அவர்களும், அதே ஆண்டு, நொபெல் அமைதி விருதைப் பெற்றார்.

இளையோரின் சக்தி மீது நம்பிக்கையை வளர்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/04/2018 13:35