2018-04-13 15:15:00

வெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி


ஏப்.13,2018. இந்தியாவில், சகிப்பற்றதன்மையும், வகுப்புவாத வன்முறைகளும் அதிகரித்துவருகின்றவேளை, பல்வேறு மதங்களின் உண்மையான போதனைகளைப் பரப்புவதற்கு, நாட்டின் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

இப்புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் (ஏப்ரல் 11,12) மத்திய பீரதேச மாநிலத்தின் இந்தோரில், இந்தியாவின் 1,500க்கும் மேற்பட்ட, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன மற்றும் புத்த மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் காணப்படும் வெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட உறுதி எடுக்கப்பட்டது.

இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்காக உழைக்கும் மூன்று நிறுவனங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டம் பற்றி யூக்கா செய்தியிடம் பேசிய, Adil Sayeed அவர்கள், நாட்டில் வகுப்புவாத வன்முறை அதிகரித்து வருவதால், அதற்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில், 2017ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன, 2016ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 348 ஆக இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.