சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை: ஆடுகளே பலியாகும், சிங்கங்கள் அல்ல...

அம்பேத்கர் அவர்களை மையப்படுத்திய பள்ளி நிகழ்ச்சியை நடத்தும் மாணவர்கள் - AP

14/04/2018 14:58

1891ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி பிறந்த மாமேதை அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவர் கூறிய சில பொன்மொழிகள், நம் அனைவருக்கும், குறிப்பாக, இளையோருக்கு உந்து சக்தியாக அமையட்டும்.

"மனித வாழ்வு, நீண்டதாக இருப்பதைக்காட்டிலும், உன்னதமானதாக இருக்கவேண்டும்"

"குடியரசு என்பது, ஓர் அரசுசார்ந்த வடிவமல்ல. அது, அனைத்திற்கும் மேலாக, நம் சக மனிதருக்கு மதிப்பு வழங்கும் மனநிலையிலிருந்து உருவாவது."

"இழந்த உரிமைகளை, அவற்றைப் பறித்தவர்களின் மனசாட்சிக்கு விடுக்கும் விண்ணப்பங்கள் வழியே பெற இயலாது. தொடர்ந்த போராட்டத்தின் வழியில் மட்டுமே அவற்றைப் பெற இயலும்... பலியிடப்படுவன, ஆடுகளேயன்றி, சிங்கங்கள் அல்ல."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/04/2018 14:58