சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

குழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை

பெரு நாட்டில் குழந்தைகள் காப்பகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

16/04/2018 16:08

ஏப்.,16,2018. இன்றைய உலகில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நம் ஒவ்வொருவரின் கடமை குறித்து டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்று, திருத்தந்தை, இத்திங்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

மேலும், இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'திருஅவை இளமையானது, ஏனெனில் நற்செய்தியே அதன் வாழ்வின் இரத்தமாக உள்ளது, மற்றும், அதற்கு தொடர்ந்து புத்துயிரூட்டி வருகின்றது' எனவும்,  தன் இரண்டாவது டுவிட்டரில், 'நான் இடைவிடாது அமைதிக்காக செபித்துவரும் அதேவேளையில், அதே வண்ணம் செபிக்குமாறு நல்மனதுடைய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மேலும், அரசியல் பொறுப்பிலிலுள்ளோர் அனைவரும், நீதியும் அமைதியும் நிலவ தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என விண்ணப்பிக்கிறேன்' எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/04/2018 16:08