சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல்

உயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல் - REUTERS

16/04/2018 15:56

ஏப்.,16,2018. பாகிஸ்தானின் Quetta பகுதியில் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றின் கோவிலிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீது மத தீவிரவாதிகள் சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இசா நாக்ரி என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதவழிபாட்டை முடித்து கோவிலில் இருந்து வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்களில் வந்த நான்கு பேர், தொடர்ந்து சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களில் Quetta  பகுதி கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும் இது. கடந்த டிசம்பரில் பெத்தேல் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், இதே பகுதியில், இந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு மறுநாள் Shah Zaman சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இவையனைத்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை எனக்கூறும் அப்பகுதி கிறிஸ்தவர்கள், அரசின் உடனடி  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி

16/04/2018 15:56