சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்

டாக்காவில் உதயன் பூங்காவில் திருத்தந்தை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யும் தியோக்கோன்கள் - AP

18/04/2018 14:48

ஏப்.18,2018. ஏப்ரல் 22, நல்லாயன் ஞாயிறன்று, காலை 9.15 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அருள்பொழிவு செய்யவிருக்கும் 16 அருள் பணியாளரைக் குறித்த விவரங்களை, உரோம் மறைமாவட்டம் வெளியிட்டுள்ளது.

திருத்தந்தையால் அருள்பொழிவு பெறவிருக்கும் 16 தியாக்கோன்களில், 11 பேர் உரோம் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனவும், ஏனையோர், வியட்நாம், மியான்மார், கொலம்பியா மற்றும் சான் சால்வதோர் நாடுகளை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ம் தேதி சிறப்பிக்கப்படும் நல்லாயன் ஞாயிறு, இறை அழைத்தலுக்கென செபிக்கும் 55வது உலக நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

இத்தருணத்தைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 20, இவ்வெள்ளியன்று, உரோமைய பாப்பிறை அருள்பணியாளர் பயிற்சி இல்லத்தில், மாலை 7.30 மணிக்கு, திருத்தந்தையின் சார்பில், உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் பேராயர் ஆஞ்செலோ தொனாத்திஸ் அவர்கள் தலைமையில் திருவிழிப்பு திருவழிபாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/04/2018 14:48