2018-04-19 15:22:00

இமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்


இந்தியாவில் நூற்றுக்கணக்கான ரிஷிகள் இருந்தார்கள். நம்மிடையே இலட்சக்கணக்கான ரிஷிகள் வேண்டும். நிச்சமயமாக வரத்தான் போகிறார்கள். நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கின்றது. எழுந்திருங்கள். உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள். கோவிலுக்குப் போவதாலோ, மத உடைகளை அணிந்துகொள்வதாலோ, மதச் சின்னங்களை இட்டுக்கொள்வதாலோ மதம் ஆகிவிடாது. ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லையென்றால், நீங்கள் கடவுளை உணரவில்லையென்றால், எல்லாம் வீண். மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள்.

ஒவ்வொரு கருத்தும் விரிந்து விரிந்து உலகம் முழுவதையும் தன்னுள் கொள்ளத்தக்க அளவு விரிய வேண்டும். ஒவ்வோர் இலட்சியமும் விரிந்து மனித குலம், இல்லை இல்லை, உயிர்க்குலம் முழுவதையும் உள்ளடக்கும்படி விரிய வேண்டும்.

வேலையில் ஈடுபடுங்கள். அப்போது உங்களால் தாங்க முடியாத மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள்.

பிறருக்காகச் செய்யப்படும் சிறுவேலைகூட நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்பவல்லது. பிறர்நலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதனால், படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகும்.

எழுந்து நில். விழித்துக்கொள். கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும் (சுவாமி விவேகானந்தர்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.