2018-04-25 16:44:00

25 ஆண்டுகளுக்குப் பின் இரணைத்தீவில் காலடி பதித்தவர்கள்


ஏப்.25,2018. இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள இரணைத்தீவுக்கு, (Iranaitheevu) அத்தீவில் வாழ்ந்த கத்தோலிக்க விசுவாசிகள், 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சென்றனர் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், இரணைதீவைவிட்டு 1992ம் ஆண்டு வெளியேறிய 200க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள், ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று மீண்டும் தாங்கள் வாழ்ந்துவந்த தீவில் காலடிப் பதித்தனர்.

இத்தீவுக்கு வருவதற்கு முன்னதாக, முலங்கவேலி (Mulankaveli) எனுமிடத்தில் உள்ள செபமாலை அன்னை மரியா ஆலயத்தில் திருப்பலியும், செபமாலை பக்தி முயற்சியும் நடைபெற்றதென்று ஆசியா செய்தி கூறுகிறது.

இதன்பின், 40 படகுகளில் பயணித்த கத்தோலிக்கர்கள், தங்களுக்கு மீண்டும் தங்கள் சொந்த மண்ணில் வாழ உரிமை வழங்கவேண்டும் என்ற கோஷங்களுடன் தீவில் அடியெடுத்து வைத்தனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.