2018-05-01 15:44:00

தொழில் என்பது, மனித மாண்பின் அடிப்படைக் கூறு


மே,01,2018. வேலை என்பது மனித மாண்பின் அடிப்படைக்கூறு என்ற கருத்தை வலியுறுத்தி, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பை நினைவுகூர்ந்து, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தொழில் என்பது மனித மாண்பின் அடிப்படைக்கூறு என்பதை மறக்காமல், தொழிலாளரான புனித யோசேப்பின் விழாவை நாம் சிறப்பிக்கின்றோம்', என்ற சொற்கள், திருத்தந்தையின் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

இதே நாளில் இன்னுமொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் வணக்க மாதமான இந்த மே மாதத்தில் உலக அமைதிக்காக செபமாலை செபிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

'இன்று, உரோம் நகர், தெய்வீக அன்பின் அன்னைமரியா திருத்தலத்தில் நாம் செபமாலை செபிக்கும்போது, சிரியா, மற்றும், இவ்வுலகமனைத்தின் அமைதிக்காக செபிப்போம். இந்த மே மாதம் முழுவதும், அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்' என தன் இரண்டாவது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.