சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

புதிய சனநாயக வாழ்வுக்கு மலாவி ஆயர்கள் அழைப்பு

மலாவி ஆயர்கள் கூட்டுத்திருப்பலி

02/05/2018 15:41

மே,02,2018. வறுமை மற்றும் சமத்துவமின்மையை அகற்றும் சனநாயகத்தின் புதிய சகாப்தத்தை மலாவி நாட்டினர் அமைக்க வேண்டுமென, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்ரிக்க நாடாகிய மலாவியில் புதிய சகாப்தத்திற்கு அழைப்பு என்ற தலைப்பில், மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், நாடு சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் ஆகியும், பெருமளவான குடிமக்கள், இன்னும் கடும் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர்.

இஞ்ஞாயிறன்று நாட்டின் அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்பட்ட இந்த அறிக்கையில், கடுமையாக உழைத்துப்பெற்ற சுதந்திரம், அதன் பலன்களை இன்னும் எட்டவில்லை என கவலை தெரிவித்துள்ளனர், ஆயர்கள்.

2019ம் ஆண்டில் மலாவி நாட்டினர் பொதுத்தேர்தல்களைச் சந்திக்கவிருக்கும்வேளையில், நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகின்ற கூறுகள் கவனம் செலுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/05/2018 15:41