2018-05-05 16:22:00

ஈராக் பொதுத்தேர்தலையொட்டி முதுபெரும்தந்தை அறிக்கை


மே,05,2018. ஈராக் நாட்டில் வருகிற வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஈராக்கிலும், உலகெங்கிலும் வாழ்கின்ற கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கென, மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், பாக்தாத் முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ.

ஈராக்கில், மே 12, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் கிறிஸ்தவர்கள், அந்நாட்டில் தங்களின் இருப்பை உறுதிப்படுத்தும் விதத்தில்    வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார், முதுபெரும்தந்தை சாக்கோ.

கல்தேய கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாற்றங்களைத் தவிர, நாட்டில், இக்கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும், சமூக மற்றும் கலாச்சார வாழ்வும் குறைந்து வருகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார், முதுபெரும்தந்தை சாக்கோ.

மேலும், லெபனான் நாட்டில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பல்வேறு அரசியல் மற்றும் நிறுவன நெருக்கடிநிலைகள் இடம்பெற்றிருக்கும்வேளை, மே 06, இஞ்ஞாயிறன்று, முதன்முறையாக அந்நாட்டில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற லெபனானில், கிறிஸ்தவ வேட்பாளர் வெற்றி பெறுவது கடினம் எனினும், புதிய அரசியலமைப்பின்படி, புதிய அரசில் கிறிஸ்தவர்களின் பங்கேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.