சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை- இறந்தும், உறுப்புதானம் வழியே வாழும் பிரதீப்

மனித இதயம் - RV

09/05/2018 15:52

21 வயது நிறைந்த இளையவர் பிரதீப்பின் தந்தை ஒரு தொழிலாளி. தாய், தொழில் எதுவும் செய்யாமல், வீட்டிலிருந்து வரு¬கிறார். பிர¬தீப்பிற்கு இரு சகோதரிகள். வறுமை காரணமாக இளவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லும் நோக்கத்தில், ஒரு பயிற்சி வகுப்புக்குச் செல்லும் வழியில், விபத்துக்குள்ளாகி, மூளைச் சாவடைந்தார், பிரதீப். திடீர் விபத்தின் காரணமாக, பிரதீப் மூளைச் சாவடைந்ததன் பின்னரும், உடற்பாகங்களை மற்றவர்களுக்குத் தானம் செய்வதன் வழியாக தங்கள் மகனை உயிர்¬வாழ வைக்கமுடியும் என அறிந்து கொண்ட பிரதீப்பின் பெற்றோர், உடலுறுப்புகளை தானம் செய்ய  சம்மதம் தெரிவித்தனர். பின்னர், பிரதீப்பின் இதயம் பெறப்¬பட்டு, அதனை அநுராதபுரத்தை சேர்ந்த 34 வயதான பெண்ணொருவருக்கு பொருத்தி, இலங்கையின் முதலாவது இதயமாற்று சிகிச்சை கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பிரதீப்பின் சிறுநீரகங்களும், கண்களும் வேறு நபர்களுக்கு பொருத்தப்பட்டன. தங்கள் மகன் தங்களை விட்டுப் பிரிந்து சென்றது ஒருபுறம் வருத்தமளித்தாலும், அவரது உடலுறுப்புகள் வழியாக 5 பேர் பெரும் பயனடைவதை முன்னிட்டு தாங்கள் மகிழ்ச்சி கொள்வதாக பிரதீப்பின் பெற்றோர் பெருமிதம் கொண்டனர். மகனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதற்காக கண்டி பொது மருத்துவமனை 6 இலட்சம் ரூபாய் வழங்க முன்வந்தபோதிலும், தங்கள் மகனுக்காக செய்த புண்ணிய காரியமாக இந்த உடலுறுப்பு தானத்தை கருதி, அத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு மறுத்துள்ளனர், பிரதீப்பின் ஏழை பெற்றோர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/05/2018 15:52