சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தையின் மூன்று டுவிட்டர் செய்திகள்

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் வலைத்தளப் பக்கம் - ANSA

10/05/2018 15:39

மே.10,2018. உயிர்ப்புத் திருவிழாவின் 40வது நாளான இவ்வியாழனன்று, பாரம்பரியத்தின்படி, வத்திக்கானில் கொண்டாடப்பட்ட ஆண்டவரின் விண்ணேற்றத் திருநாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

“உயிர்த்த இயேசுவின் விண்ணேற்றம், இறைவனுடன் வாழும் வாழ்வின் நிறைவில் நாமும் பங்கேற்போம் என்ற உறுதியை வழங்குகிறது” என்ற சொற்கள் இவ்வ்வியாழன் காலை திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

மேலும், இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நோமதெல்ஃபியா மற்றும் லோப்பியானோ ஆகிய இரு நகரங்களில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தில் வழங்கிய உரைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரு வாக்கியங்கள், இரு டுவிட்டர் செய்திகளாக வெளியாயின.

"அருள்பணி சேனோ அவர்களால் உந்தப்பட்டு, உடன்பிறந்த உணர்வு என்பதை நம் வாழ்வின் மையக் கட்டளையாக மாற்ற உறுதி பூணுவோம்" என்பது இவ்வியாழன் வெளியான இரண்டாவது டுவிட்டர் செய்தி.

"லோப்பியானோவில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் இருப்பதுபோல் உணர்கின்றனர்! கியாரா லூபிக் அவர்களின் தனிவரத்தினால் தூண்டப்பட்டு, புதிய வழிகளில் உரையாடலையும், ஒருங்கிணைப்பையும் நாடுகிறோம்" என்ற சொற்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/05/2018 15:39