சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை : எத்தனை வளர்ந்தாலும், தாய்க்கு குழந்தைதான்

மகனை தேற்றும் தாய் - AFP

11/05/2018 15:39

அன்று கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள், கிருட்டிண சாமியும், அவரின் மனைவியும், அவர் தாயும், இரு குழந்தைகளும். கிருட்டிண சாமி, தன் இரு பெண் குழந்தைகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு முன்னே நடக்க, பின்னால் அவர் மனைவியும் தாயும் பேசிக்கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தனர். இரண்டு மற்றும் நான்கு வயதான தன் குழந்தைகளுடன் சிரித்துப் பேசி அரட்டை அடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்த கிருட்டிண சாமி தன் முன்னால் இருந்த சிறு குழியைக் கவனிக்கவில்லை. திடீரென்று அதில் காலை வைக்க, கால் இலேசாக பிசகிவிட்டது. ‘ஐயோ அம்மா’, என அவர் அலற, தாயோ ஓடோடிச் சென்று, ‘என்ன தம்பி, பார்த்து நடக்கக்கூடாதாப்பா’, என்று அவரை தாங்கிப்பிடித்தார். ‘ஒன்னுமில்லம்மா, சரியாகிவிடும்’ எனக் கூறிய மகன், தன் குழந்தைகளைப் பிடித்திருந்த கையை இன்னும் விடவில்லை என்பதை கவனித்தார் அத்தாய். தன் இரு குழந்தைகளையும் பொறுப்புடன் வளர்க்கும் அளவுக்கு தன் மகன் மாறிவிட்டாலும், இன்னும் அவரை ஒரு குழந்தையைப்போல் நடத்துகிறோமே என்று வெட்கப்படுவதற்குப் பதில், பெருமைதான்பட்டார் அத்தாய். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/05/2018 15:39