சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை - நடமாடும் நற்செய்திகள்!

"தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" - புனித பிரான்சிஸ் - RV

12/05/2018 15:28

ஒரு நாள், புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு, பிரான்சிஸ், தன்னை அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர், பெருமிதம் கலந்த மகிழ்வில் மிதந்தார். அன்று முழுவதும், அவ்விளையவரும், பிரான்சிஸும் ஊருக்குள் பிறரன்புப் பணிகள் பல செய்தனர். மாலையில் அவர்கள் வீடுதிரும்பிய வேளையில், இளையவர், தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று, தன் உள்ளக் குமுறலை வெளிபிட்டார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளைவிட வலிமை மிக்கவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு புனித பிரான்சிஸ் தெளிவுபடுத்தினார்.

கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்துவரும் பல இளையோர், நடமாடும் நற்செய்திகள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/05/2018 15:28