சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அலுவலகத்தில் திருத்தந்தை

‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அங்கத்தினர்களுடன்

12/05/2018 16:25

மே,12,2018. வத்திக்கானில் இயங்கிவரும் ‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ (Scholas Occurrentes) அலுவலகத்திற்கு, மே,11, இவ்வெள்ளி மாலை 4 மணியளவில் சென்று, புதிய திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ள, இளம் பயிற்சியாளர்கள், மற்றும், மாணவர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ் அமைப்பு  ஆரம்பிக்கப்படுவதற்கு, வத்திக்கானில் இயங்கும் இந்த அலுவலகம் ஆவன செய்து வருகிறது.

அர்ஜென்டீனாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமையகம், இன்னும், மொசாம்பிக், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய மையங்கள் ஆகியவை குறித்து திருத்தந்தையிடம் விளக்கப்பட்டது.  

ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ் அமைப்பு, மே 07, இத்திங்கள் முதல், மே 11 இவ்வெள்ளி வரை, ஒரு பன்னாட்டு இளையோர் கூட்டத்தையும் நடத்தியுள்ளது. பத்து நாடுகளிலிருந்து ஏறத்தாழ நூறு இளையோர் இதில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/05/2018 16:25