சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை..: 80 வயது மகனுக்காக 98 வயது அன்னையின் செயல்

தன் குழந்தைகளுக்காக செபிக்கும் தாய் - AP

16/05/2018 15:19

பிரித்தானியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் வாழ்ந்துவரும் எண்பது வயது மகனைப் பராமரிப்பதற்காக, அவரின் 98 வயது அன்னை, அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில்தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுவரை திருமணம் செய்து கொள்ளாத எண்பது வயது டாமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால், தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating என்ற டாமின் 98 வயது அன்னை தெரிவித்துள்ளார். முதியோர் இல்லத்தில் அனைவரும் தனது அன்னையை அன்புடன் கவனிப்பதாகக் கூறும் டாம், சில நேரங்களில் தனது அன்னை தன்னைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் பிலிப் அவர்கள் தெரிவிக்கையில், இந்த தள்ளாத வயதிலும், தாய் மகன் பாசத்தைக் கண்கூடாகப் பார்க்கும்போது உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/05/2018 15:19