சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

தாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்தித்த திருத்தந்தை

தாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

16/05/2018 15:04

மே,16,2018. புத்தர்களும், கிறிஸ்தவர்களும் ஒருவர் ஒருவருடைய ஆன்மீக பாரம்பரியத்தை உளமார மதிப்பதில் வளரவேண்டும் என்பதே தன் விருப்பம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை சந்திக்க வந்திருந்த புத்தமதப் துறவிகளிடம் கூறினார்.

தாய்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்திருந்த புத்தமதத் துறவிகளை, மே 16 இப்புதன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதியதொரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள புத்த மதத்தின் புனித நூல், தனக்கு வழங்கப்பட்டதற்கு நன்றி கூறினார்.

திருத்தந்தை, அருளாளர் ஆறாம் பால் அவர்களும், புத்தமத தலைவர், Somdej Phra Wanaratana அவர்களும் சந்தித்த காட்சி, பல்சமய உரையாடல் திருப்பீட அவை அலுவலகத்தின் வாசலில் மாட்டப்பட்டிருப்பதை, திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

புத்தமதத்தினரும், கிறிஸ்தவர்களும் இணைந்து, நீதி, அமைதி, மனித மாண்பைக் காப்பது ஆகிய உயரிய விழுமியங்களுக்கு சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதும் தன் மனமார்ந்த விருப்பம் என்பதை, திருத்தந்தை புத்தமதப் துறவிகளிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/05/2018 15:04