சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

வன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது-திருத்தந்தை

எருசலேமில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - AP

17/05/2018 15:53

மே.17,2018. "நமது தனிமையையும், நாம் தனித்து விடப்படுவதையும் தகர்க்கும்வண்ணம் கடவுள் நம்மை அன்பு செய்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 17, இவ்வியாழன், தன் டுவிட்டர் செய்தியாக வழங்கினார்.

மேலும், எருசலேமில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதரகம் திறக்கப்பட்ட நாளன்று, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோரை மையப்படுத்தி, திருத்தந்தை இப்புதன் மாலையில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டார்.

"புனித பூமியிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் இறந்தோர் மற்றும் காயமுற்றோரைக் குறித்து என் பெரும் துயரத்தை வெளியிடுகிறேன். வன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது. எனவே, இந்நிகழ்வில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், உலக சமுதாயமும், நீதியும், அமைதியும் நிலவும்வண்ணம், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ள நான் வேண்டுகிறேன்" என்ற விண்ணப்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மே 16, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், புனித பூமி மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டதோடு, அமைதி நிலவவேண்டி மீண்டும் ஒருமுறை விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

17/05/2018 15:53