2018-05-17 16:00:00

இலங்கை போரில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க...


மே.17,2018. இலங்கை உள்நாட்டுப் போர் நிகழ்ந்த வேளையில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அரசு ஓர் அலுவலகத்தை உருவாக்கும் என்று உறுதி அளித்து ஈராண்டுகள் சென்று, அந்த அலுவலகம், அண்மையில் செயல்படத் துவங்கியுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இலங்கையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000த்திற்கும் அதிகமானோரைப் பற்றிய விவரங்களைத் திரட்டும் பணியை, அரசு அலுவலகம் அண்மையில் துவங்கியுள்ளது.

இவ்வலுவலகத்தின் முதல் சந்திப்புக்கள் மன்னாரில் அண்மையில் நிகழ்ந்ததையடுத்து, திரிகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் மட்டக்கிளப்பு ஆகிய நகரங்களிலும் அரசு அலுவலர்கள் மக்களைச் சந்திக்க உள்ளனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

அரசிடம் அனைத்து விவரங்களும் உள்ளன என்றும், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அரசு திரட்டுவது என்பது, ஒரு கண்துடைப்பு விவகாரம் என்றும், ஒரு சில குடும்பங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.