2018-05-19 15:34:00

கியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


மே,19,2018. தூய ஆவியார் பெருவிழாவாகிய மே 20, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் கூடியிருக்கும் விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் திருத்தந்தை வழங்குவார்.

மேலும், கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்றுள்ள விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபங்களும் செபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கியூப ஆயர் பேரவைத் தலைவரும், சந்தியாகோ தெ கியூபாவின் பேராயருமான Dionisio Guillermo Garcia Ibanez அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள இரங்கல் தந்திச் செய்தியில்,    அந்நாட்டு மக்களுக்கு திருத்தந்தையின் ஆறுதலும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ளியன்று, ஹவானா ஹோசே மார்டி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட போயிங் 737 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலே புகை கிளம்பியது. அது, விமான ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர் என செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.