2018-05-21 16:13:00

12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு


மே,21,2018. நாசிச மற்றும் கம்யூனிச அடக்குமுறை காலத்தில், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடிய போலந்து நாட்டு இறைஊழியர் கர்தினால் Augusto Giuseppe Hlond அவர்கள் உட்பட 12 இறைஊழியர்களின் வீரத்துவப் பண்புநிறை வாழ்க்கைமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்தில் 1881ம் ஆண்டில் பிறந்து, 1905ம் ஆண்டில் சலேசிய சபையில், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இறைஊழியர் கர்தினால் Augusto Hlond அவர்கள், இளையோர் மற்றும் ஏழைகள் மீது மிகுந்த அக்கறை காட்டியவர். புலம்பெயர்ந்தோர்க்காக கிறிஸ்துவின் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கிய இவர், 1948ம் ஆண்டு அக்டோபர் 22ம் நாளன்று, தனது 67வது வயதில் காலமானார். இவர், நாசிச மற்றும் கம்யூனிச அடக்குமுறையை கடுமையாய் எதிர்த்தவர்.

மேலும், இத்தாலியைச் சேர்ந்த நான்கு பேர், கொலம்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டீனா, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு, போலந்து ஆகிய நாடுகளில் பிறந்த ஒருவர் என, 11 இறைஊழியரின் வீரத்துவப் பண்புநிறை வாழ்க்கைமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையை சந்தித்து இந்த விவரங்களை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.

மூவொரு கடவுள் துறவற சபையைச் சேர்ந்த இறைஊழியர் இயேசுவின் திருஇதய ஆஞ்சலோ மரியா அவர்கள், 1900மாம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் போலந்து நாட்டின் ஆஷ்விஷ் வதை முகாமில், 1944ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இவர் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.