2018-05-21 16:34:00

14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்


மே,21,2018. ஜப்பான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய மூன்று ஆசிய நாடுகள் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த 14 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்து, வருகிற ஜூன் 29ம் தேதியன்று இப்புதிய கர்தினால்கள் நிகழ்வு இடம்பெறும் என அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியார் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய பின்னர், 14 புதிய கர்தினால்கள் பற்றி அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜப்பான், ஈராக், பாகிஸ்தான், போர்த்துக்கல், பெரு, மடகாஸ்கர், இத்தாலி ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த 14 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்த திருத்தந்தை, இவர்கள், இப்பூமியில் அனைத்து மனிதருக்கும், கடவுளின் இரக்கமுள்ள அன்பை தொடர்ந்து அறிவிக்கும் திருஅவையின் உலகளாவியப்பண்பை வெளிப்படுத்துகின்றார்கள் என்று கூறினார்.

ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் முதலாம் சாக்கோ, பாகிஸ்தானின் காரச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ், ஜப்பானின் ஒசாகா பேராயர் தாமஸ் அக்குய்னாஸ் மான்யோ (Thomas Aquinas Manyo) ஆகிய மூவர் ஆசியர்கள்.

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் பேராயர் லூயில் லதாரியா (Luis Ladaria), உரோம் மறைமாவட்ட பிரதிநிதி பேராயர் ஆஞ்சலோ தெ தொனாதிஸ் (Angelo De Donatis), திருப்பீட செயலகத்தின் பிரதிநிதியும், மால்ட்டா இராணுவ பக்த அமைப்பின் சிறப்பு பிரதிநிதியுமான ஜொவான்னி ஆஞ்சலோ பெச்சு(Giovanni Angelo Becciu), திருத்தந்தையின் பிறரன்புப் பணி அலுவலகத்தின் தலைவரான பேராயர் கோன்ராட் கிராஜேவிஸ்கி (Konrad Krajewski), போர்த்துக்கல் நாட்டு பாத்திமா பேராயர் அந்தோனியோ தோஸ் சாந்தோஸ் மார்தோ(António dos Santos Marto) Huancayo பேராயர் Pedro Barreto, Toamasina பேராயர் Desiré Tsarahazana,  அக்குய்லா பேராயர் Giuseppe Petrocchi, Xalapa முன்னாள் பேராயர் Sergio Obeso Rivera, Corocoro முன்னாள் ஆயர் Toribio Ticona Porco, கிளேரிசியன் சபையின் அருள்பணியாளர் Aquilino Bocos Merino  ஆகியோர் புதிய கர்தினால்கள் ஆவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.