2018-05-22 15:17:00

பல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்


மே,22,2018. இக்காலத்திலும், வருங்காலத்திலும் வாழ்கின்ற மக்களின் நலவாழ்வும், வளமையும், இப்பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களின் வாழ்வைச் சார்ந்து உள்ளது என்று, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 22, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பல்வகை உயிரினங்கள் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள், 1993ம் ஆண்டு டிசம்பரில், பல்வகை உயிரினங்கள் பற்றிய உலகளாவிய ஒப்பந்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, மரவடை மற்றும் திணை நிலத்துக்குரிய உயிரின வகைகளைப் பாதுகாப்பதில் நாடுகள் முனைப்புடன் செயல்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

கடும் ஏழ்மை மற்றும் பசியை அகற்றும் இலக்கை எட்டுவதற்கு, பல்வகை உயிரின வகைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், சுத்தமான மற்றும் போதுமான தண்ணீரைப் பெறுவதற்கு, காடுகளிலும், ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலும் உள்ள  உயிரினங்களைக் காப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார் கூட்டேரெஸ். பல்வேறு உயிரினங்களைக் காப்பதில் பெரிய அளவில் சவால்களை நாம் எதிர்கொள்ளும்வேளை, உலகின் அரசுகள் மத்தியில் இதற்கு ஆர்வமும் அவசியமாகின்றது எனவும் கூறுகிறது அச்செய்தி.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.