2018-05-30 17:24:00

உகாண்டா மறைசாட்சிகளுக்காக விசுவாச நடைப்பயணம்


மே,30,2018. ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் ஜூன் 3, வருகிற ஞாயிறன்று, இவ்வாண்டின் உகாண்டா மறைசாட்சிகள் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்கர் விசுவாச நடைப்பயணம் என்ற நடவடிக்கையைத் தொடங்குவதற்கு தயராகி வருகின்றனர்.

வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கும் பத்து கிலோ மீட்டர் தூர விசுவாச நடைப்பயணத்தில் கலந்துகொள்வதற்கென, அந்நாட்டின் Munyonyo மறைசாட்சியர் கத்தோலிக்க திருத்தலத்தில், மே 26, கடந்த சனிக்கிழமையே, பெருமெண்ணிக்கையில் கத்தோலிக்கர் கூடியுள்ளனர்.

விசுவாசிகளை ஆன்மீக முறையில் தயாரிப்பதற்காக, இந்த விசுவாச நடைப்பயணம், 2016ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

Munyonyo மறைசாட்சியர் கத்தோலிக்க திருத்தலம் அமைந்துள்ள பகுதியில்தான் அரசர் 2ம் Mwanga, கிறிஸ்தவர்களைக் கொலை செய்வதற்குத் தீர்மானித்தார். பின்னர், புனித Matia Mulumba திருத்தலம் அமைந்துள்ள இடத்தில், கத்தோலிக்கரான புனித Matia Mulumba அவர்கள் கொல்லப்பட்டார்.

1886ம் ஆண்டு மே 26ம் நாளன்று, புனிதர்கள், Denis Ssebuggwawo, Andrew Kaggwa, Pontiano Ngondwe ஆகிய மூன்று கத்தோலிக்கரும் Munyonyoல் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலும், வேறு சிலர், Namugongoல் உயிரோடு எரித்தும் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.