2018-05-30 17:11:00

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை : புதிய ஏடு


மே,30,2018. திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை, ஜூன் 01, வருகிற வெள்ளிக்கிழமையன்று, ‘ஒருவர் தன்னிடமுள்ள சிறந்ததைக் கொடுப்பதற்கு, விளையாட்டு மற்றும் மனிதர் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில், புதிய ஏடு ஒன்றை வெளியிடவுள்ளது.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kevin Farrell, இந்த அவையின் திருஅவை மற்றும் விளையாட்டுத்துறையின் பொறுப்பாளர், Santiago Perez de Camino, இத்தாலிய விளையாட்டு வரலாறு கழகத்தின் உறுப்பினரான ஆய்வாளர் Antonella Stelitano, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Seattle பல்கலைக்கழகத்தின் இறையியல் பேராசிரியர் இயேசு அருள்பணி Patrick Kelly ஆகியோர், இந்த ஏடு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வார்கள். இந்த ஏடு, இத்தாலியம், ஆங்கிலம் மற்றும் இஸ்பானிய மொழிகளில் வெளியிடப்படும்.

மேலும், இந்த ஏடு தயாரிப்பில், இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரரும், “இயேசு இளையோர் (Jesus Youth)” இயக்கத்தை ஆரம்பித்தவருமான Manoj Sunny, பெரு நாட்டு கிறிஸ்தவ வாழ்வு இயக்கப் பொது ஒருங்கிணைப்பாளர் Alexandre Borges de Magalhaesஉட்பட சில பொதுநிலையினரும் ஈடுபட்டனர் என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.