2018-06-01 14:22:00

இமயமாகும் இளமை .........: ஊனத்தை நொறுக்கி, சதமடித்து சாதனை!


பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, மாற்றுத்திறன் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் காது கேளாத, மற்றும், வாய் பேச முடியாத மாணவர்கள். கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர். கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும், இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர். சைகை மொழியில் மட்டுமே தங்களுக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாகக் கடந்து வரும் இந்த மாணவர்கள், தற்போது, மேலும் ஒரு படி சாதனையை உயர்த்திக் காண்பித்து உள்ளனர். சாதாரண மாணவர்களைவிட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன், பல்வேறு இடர்பாடுகளுடன் பாடங்களைக் கற்பித்து வருவதாகவும், இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்குப் பெருமையை அளிப்பதாக உள்ளதாகவும் கூறுகின்றனர் ஆசிரியர்கள். இதனால் மற்ற காது கேளாத, மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு, இந்த மாணவர்களின் இந்த மதிப்பெண்கள் ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.