சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை : விரல்களற்ற கரங்களில் இறைவனைத் தாங்கியவர்

திருப்பலியில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் - AP

02/06/2018 12:31

17ம் நூற்றாண்டில், கனடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் அவர்களும் ஒருவர். தன் 29வது வயதில், அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றதும், அம்மக்களிடையே தன் பணியைத் துவக்கிய அவர், அம்மக்களால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும். அருள்பணி ஐசக் ஜோக்ஸ், தன் 39வது வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/06/2018 12:31