2018-06-02 14:30:00

அன்னை மரியா விழாவில் தேவையிலுள்ளவர்களுக்கு உணவு


ஜூன்,02,2018. இலங்கையில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில், மாணவர்கள் அன்னை மரியா விழாவைச் சிறப்பித்தவேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள Bambalapitiyaவில் திருக்குடும்ப அருள்சகோதரிகள் நடத்தும் பள்ளியிலுள்ள மாணவிகள், அன்னை மரியா விழாவன்று மலர்களை அர்ப்பணிப்பதைக் குறைத்து, தேவையில் இருக்கும் மக்களுக்கு மேலும் உணவுப்பொருள்களை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, அப்பள்ளியின் தலைமைச் சகோதரி தீபா பெர்னான்டோ அவர்கள், உணவுப்பொருள்கள், தண்ணீர் பாட்டில்கள், பள்ளிக்குத் தேவையான பேனா, பென்சில், நூல்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு, அன்னை மரியா விழாக் கொண்டாட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, உணவு மற்றும் படிப்புக்குத் தேவையான பல்வேறு பொருள்களைச் சேகரித்தனர் என்று, அருள்சகோதரி தீபா பெர்னான்டோ அவர்கள் மேலும் கூறினார்.    

ஆதாரம் : AsiaNews /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.