சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறந்த நினைவு

புனித திருத்தந்தை 23ம் ஜான்

04/06/2018 16:43

ஜூன்,04,2018. நம்மிலிருக்கும் கிறிஸ்துவின் உயிருள்ள பிரசன்னம், நம் தேர்வுகளை வழிநடத்தும் ஒளி. அப்பிரசன்னம், நாம் ஆண்டவரைச் சந்திக்கச் செல்கையில், நம் இதயத்தில் வெப்பமாக்கும் சுடர் என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இத்திங்களன்று வெளியாயின.

மேலும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறந்த நினைவு நாளையொட்டி, அத்திருத்தந்தை பிறந்த Sotto il Monte என்ற ஊரில், பெர்கமோ ஆயருடன், இஞ்ஞாயிறு நண்பகல் செபவேளையில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு வாழ்த்துக் கூறினார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் பிறந்த பெர்கமோ மறைமாவட்டத்திற்கு அவரின் புனிதப்பொருள் சென்றதையொட்டி “Eco di Bergamo” என்ற இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், நற்செய்திக்குச் சான்று பகர்ந்ததையும், நற்செய்தி மீது அவர் கொண்டிருந்த அன்பையும் பாராட்டினார். 

இளையோர், கிறிஸ்தவம், கிறிஸ்துவோடு சந்திப்பு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம், பல்சமய உரையாடல், பயங்கரவாதம் போன்ற பல்வேறு தலைப்புகளில், “Eco di Bergamo” தினத்தாளுக்கு பேட்டியளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

04/06/2018 16:43