சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

இஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து

இஸ்பெயினின் புதிய பிரதமர் Pedro Sánchez - REUTERS

06/06/2018 15:04

ஜூன்,06,2018. இஸ்பெயின் நாட்டில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள Pedro Sánchez மற்றும் அவரின் அரசுக்கு, நல்வாழ்த்து தெரிவித்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Ricardo Blazquez.

இஸ்பெயினின் புதிய பிரதமர் Pedro Sánchez அவர்களுக்கு, கத்தோலிக்க ஆயர்கள் சார்பில், நல்வாழ்த்து தெரிவித்துள்ள, கர்தினால் Ricardo Blazquez அவர்கள், புதிய அரசுக்கு தங்களின் செபங்களையும்,ஒத்துழைப்பையும் உறுதிசெய்துள்ளார்.

பொது நலம், ஒன்றிப்பு, வளமை, சமூக நல்லிணக்கம், அமைதி, நீதி, சுதந்திரம் ஆகியவற்றின் பாதையில் நாட்டு மக்களை வழிநடத்திச்செல்லவேண்டிய புதிய பிரதமரின் பொறுப்புக்களைப் பட்டியலிட்டுள்ள கர்தினால் Ricardo Blazquez அவர்கள், நாட்டின் பொதுநலனுக்குச் சிறப்பாக சேவையாற்றுவதற்கு, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2, கடந்த சனிக்கிழமையன்று, அரசியலைமப்பின்மீது பதவிப்பிரமாணம் செய்தார் புதிய பிரதமர் Pedro Sánchez. இஸ்பெயினில், மரபுப்படி, திருவிவிலியம் மற்றும் திருச்சிலுவைமீது பதவிப்பிரமாணம் செய்வது வழக்கம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/06/2018 15:04