சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

திருத்தந்தை - ஜூலை 7, பாரி பயணம் பற்றிய விவரங்கள்

புனித நிக்கோலாஸ் - EPA

07/06/2018 16:25

ஜூன்,07,2018. இயேசுவோடு இருப்பவர்கள், இன்னும் அதிகமாக அன்புகூர்வதற்கு ஒரு வாய்ப்பாக, தீமையை நோக்க வேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், வருகிற ஜூலை 7, சனிக்கிழமையன்று, இத்தாலியின் பாரி நகருக்கு,   திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் ஒருநாள் பயணம் பற்றிய விவரங்களை, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

அன்று காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, 8.15 மணிக்கு பாரி நகர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் வளாகத்தை அடைவார். பாரி பேராயர் (Francesco Cacucci), Puglia மாநில தலைவர் (Michele Emiliano), பாரி மேயர் (Antonio Decaro) போன்றவர்களால் வரவேற்கப்படும் திருத்தந்தை, புனித நிக்கோலாஸ் பசிலிக்காவிற்குமுன், முதுபெரும்தந்தையர்களால் வரவேற்கப்படுவார்.

காலை 9.30 மணிக்கு கடற்கரையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, 11 மணிக்கு புனித நிக்கோலாஸ் பசிலிக்காவில் முதுபெரும்தந்தையருடன் கலந்துரையாடுவார். அன்று மாலை 5.15 மணியளவில் வத்திக்கான் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/06/2018 16:25