சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

‘சிறார் இரயில்’ சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

சிறார் இரயில்’ திட்ட சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

09/06/2018 14:42

ஜூன்,09,2018. தம் திருஅவை, எவ்வாறு இருக்கவேண்டுமென கடவுள் விரும்புகின்றாரோ, அவ்வாறு இருப்பவர் அன்னை மரியா என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட புனித கன்னி மரியாவின் மாசற்ற இதயம் விழாவை நினைவுகூர்ந்து, அன்னை மரியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, அன்புகூர்கின்ற மற்றும் தாழ்மையான அன்னையாகவும், உடைமைகளில் ஏழையாகவும், அன்பில் செல்வராகவும் இருக்கவேண்டுமென, கடவுள் தம் திருஅவையை விரும்புகின்றார். அவ்வாறு இருப்பவர் அன்னை மரியா என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சிறார் இரயில்’ என்ற திட்டத்தில், இரயிலில் பயணம் செய்து, இச்சனிக்கிழமை நண்பகல்வேளையில் வத்திக்கான் வந்த சிறாரை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் முன்பகுதியில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நகிழ்வில் சிறார் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறியத் திருத்தந்தை, அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்து ஆசீர்வதித்தார்.

திருப்பீட கலாச்சார அவையின் புறவினத்தார் மன்றம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/06/2018 14:42