2018-06-09 15:35:00

தென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்


ஜூன்,09,2018. தென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதற்கு, சூடான் மற்றும் தென் சூடான் கத்தோலிக்கத் திருஅவை, போரில் பலியானவர்கள், இவ்விரு நாடுகளில் நசுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார், தென் சூடான் ஆயர் Barani Eduardo Hiiboro Kussala.

தென் சூடான் தலைநகர் ஜூபாவில் திருப்பீடத் தூதரகம் அமைக்கப்படுவது குறித்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இத்தீர்மானம், தென் சூடானுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள நட்பின் அடையாளமாக உள்ளது எனவும், பீதேஸ் செய்திடம் தெரிவித்துள்ளார், ஆயர் Barani Eduardo.

தென் சூடானில் நிரந்தரமாக திருப்பீடத் தூதரகம் திறப்பது குறித்த இத்தீர்மானம், திருத்தந்தை, தென் சூடான் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், தென் சூடான் அரசு, நாட்டிலுள்ள எல்லா மதக் குழுக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருக்கின்றது என்றும் ஆயர் கூறினார்.

தென் சூடான் 2011ம் ஆண்டில் தனி நாடானது.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.