சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை – உங்கள் அறிவை, திறமையை நம்புங்கள்

பெரும் நிறுவனத்துக்குள் பணியாள் ஒருவர் - AP

11/06/2018 14:18

1928ம் ஆண்டில், டி.டி.கிருஷ்ணமாச்சாரி(T.T.Krishnamachari) என்பவரால், வெளிநாட்டு பொருள்களை இந்தியாவில் விற்கும் நிறுவனமாக, டி.டி.கே. அண்ட் கோ என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணமாச்சாரிக்கு அரசியலில் ஆர்வம் ஏற்படவே, இந்த நிறுவனத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, தனது மூத்த மகன் டி.டி நரசிம்மனிடம் ஒப்படைத்தார் அவர். அச்சமயத்தில், வெளிநாட்டு நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்ய முடிவெடுத்ததால், டி.டி.கே நிறுவனத்துக்கு பிரச்சனை ஏற்பட்டது. கடன் வாங்க வேண்டிய சூழல். இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக டிடி.கிருஷ்ணமாச்சாரி நியமனம் செய்யப்பட்டார். அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதால், எப்எம்சிஜி (FMCG) பொருள்களுக்கான இறக்குமதியை அவர் தடை செய்தார். இதனால் டிடிகே குழுமம் மேலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், எப்எம்சிஜி பொருள்களை நாமே சொந்தமாகத் தயாரிக்கலாமே என்னும் திட்டத்தில் பல ஆலைகள் தொடங்கப்பட்டன. டிடிகே நிறுவனமும் பல தொழில்களைத் தொடங்கியது. இவற்றை வழிநடத்த சரியான நிர்வாகிகள் இல்லாததால், நிறுவனத்தின் கடன் பத்து கோடி ரூபாயாக அதிகரித்தது. அச்சமயத்தில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தனது இளைய மகன் டி.டி.ஜெகன்நாதன் அவர்களை, இந்தியா திரும்பி அந்நிறுவனத்தைக் கவனிக்குமாறு பெற்றோர் வற்புறுத்தினர். இதனால், 1972ம் ஆண்டு, தனது 24வது வயதில், இந்தியா திரும்பி, அந்நிறுவனத்தின் கடன்களை அடைத்து, இன்று அதை பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றியுள்ளார் டி.டி.ஜெகன்நாதன். அந்த குழுமத்தின் சிக்கல் என்ன, அதில் இருந்து எப்படி மீட்டு வந்தோம் என்பதை, Disrupt and Conquer என்னும் புத்தகத்தில், டிடி.ஜெகன்நாதன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் என்பதை கனவிலும் நினைக்கவில்லை என்று சொல்லியுள்ள டி.டி.ஜெகன்நாதன் அவர்கள், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு, டிடிகே குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியவர். Gasket Release System என்பதனையும் கண்டுபிடித்துள்ளார் இவர். டி.டி.கே. குழுமத்தின் (TTK Group) தலைவரான டிடி.ஜெகன்நாதன் அவர்கள், “உங்களை நம்புங்கள், பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள், உங்கள் அறிவை, திறமையைப் பயன்படுத்துங்கள்” என்று, இக்காலத்தில் தொழில்முனைவோர்களுக்குச் சொல்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/06/2018 14:18