சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

தீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு

கெய்ரோ அல் ரிஃபாய் மசூதி - REUTERS

13/06/2018 16:57

ஜூன்,13,2018. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட முஸ்லிம் குரு ஒருவர், அருகிலிருந்த மசூதிக்குச் சென்று, தொழுகைக்குப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி வழியாக, அத்தீயை அணைப்பதற்கு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார் என, பீதேஸ் செய்தி கூறுகிறது.

கெய்ரோவுக்குப் புறநகரிலுள்ள Shubra al Khaymah பகுதியில், இஞ்ஞாயிறு மற்றும் இத்திங்கள்கிழமைக்கு (ஜூன் 10,11) இடைப்பட்ட இரவில், Anba Makar ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு, அதன் அருகிலுள்ள மசூதியின் குரு Sheikh El Jamea அவர்கள் இவ்வாறு செய்துள்ளார். அந்நேரத்தில், இப்தார் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த இளையோர், முதலில் வந்து அத்தீயை அணைப்பதற்கு உதவினர் என பீதேஸ் செய்தி கூறுகிறது.

மேலும், இந்தியாவின் லக்னௌவில், ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைய Mankameshwar இந்து ஆலயக் குருக்கள், இஞ்ஞாயிறு இரவில், முஸ்லிம்களை வரவழைத்து இப்தார் உணவை, அதுவும் சைவ உணவையே வழங்கியுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. இந்நிகழ்வில் சில முக்கிய முஸ்லிம்கள் குருக்களும் கலந்துகொண்டனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : Fides /  வத்திக்கான் வானொலி

13/06/2018 16:57