சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

உலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து

இரஷ்யா உலக கோப்பை கால்பந்து திடல் - REUTERS

14/06/2018 16:45

ஜூன்,14,2018. இவ்வியாழனன்று இரஷ்யாவில் துவங்கியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்கும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இன்று இரஷ்யாவில் துவங்கும் கால்பந்து போட்டிகளைப் பின்பற்றுவோருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த விளையாட்டு நிகழ்வு, நல் சந்திப்புகளுக்கும் தோழமைக்கும் உதவுவதாக' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும், இரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் அவர்களும், இந்த உலக கால்பந்து போட்டி குறித்து தங்கள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

கால்பந்து போட்டியையொட்டி இரஷ்யா வரும் வெளிநாட்டவர்களுக்கு, உயர்ந்த விருந்தோம்பலையும் வரவேற்பையும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர்கள் வழங்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் முதுபெரும்தந்தை கிரில்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/06/2018 16:45