2018-06-15 16:17:00

புனித திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பினர் சந்திப்பு


ஜூன்,15,2018. புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் பிரதிநிதிகள் 15 பேரை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும்,  அன்பு வார்த்தைகளில் வெளிப்படாமல் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதால், அது, எப்போதும் பிறருக்குப் பணியாற்றுவதில் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்டுள்ளார்.

ஜூன் 21, வருகிற வியாழனன்று, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு திருத்தந்தை, ஜெனீவா நகருக்கு நான்காவது முறையாகச் செல்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணம் அமைகின்றது என்றும், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தனது 5வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தில், 1969ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அந்நகருக்குச் சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ILO எனப்படும் ஐ.நா. வின் உலக தொழில் நிறுவனம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜெனீவா சென்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அச்சமயத்தில், ஜெனீவாவிலுள்ள, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் மையத்திற்கும் சென்றார். ஜெனீவாவிலுள்ள, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வருகிற வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஏறக்குறைய 350 கிறிஸ்தவ சபைகள், WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில் உறுப்புகளாக உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.