சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

Eid-al-Fitr விழாவில் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை

பாகிஸ்தானில் இரமதான் தொழுகை - AP

16/06/2018 15:59

ஜூன்,16,2018. இரமதான் புனித மாதத்தின் நிறைவையொட்டி, பாக்தாத் மார் கோர்கிஸ் கல்தேய வழிபாட்டுமுறை ஆலயத்தில் நடைபெற்ற இரவு விருந்தில், முஸ்லிம்கள் எல்லாருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ.

இந்நிகழ்வில், உள்ளூர் அதிகாரிகள், பாக்தாத் நகரிலுள்ள பாலஸ்தீனத் தூதர் உட்பட, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், Mandaeans, Sabeans ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இவ்விழாவுக்கென செய்தி வெளியிட்ட முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், ஈராக்கில் அண்மையில் நடந்த தேர்தல்களில் வெற்றியடைந்துள்ள கட்சிகள், நாட்டில் ஒன்றிப்பை உருவாக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஒப்புரவு, அமைதி, நிலையானதன்மை, மறுசீரமைப்பு போன்றவை நோக்கி நாட்டை வழிநடத்துமாறும், ஈராக் மக்களின் நன்மையைக் கருதி தியாக உணர்வுடன் ஆட்சிசெய்யுமாறும், முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/06/2018 15:59