2018-06-18 16:11:00

உகாண்டா ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு


ஜூன்,18,2018. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினாவை முன்னிட்டு, உகாண்டா நாட்டு ஆயர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உகாண்டா ஆயர்கள் தங்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டில், கடத்தல்கள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

உகாண்டா மக்களின் வாழ்வும், சொத்துக்களும் பாதுகாக்கப்படுவதற்கு, அரசும், அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு விண்ணப்பித்துள்ள ஆயர்கள், அறிவற்ற இக்குற்றச் செயல்களை நிறுத்தி, மனித வாழ்வை மதிக்குமாறு, குற்றக்கும்பல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

2018ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 42 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது. இவர்களில் பலர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர்.    

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.