2018-06-20 14:56:00

இமயமாகும் இளமை: புகைப்பிடிக்கும் சிறார் இந்தியாவில் 6 கோடி


இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் புகைப்பிடிக்க ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவில் வாரத்துக்கு 17,887 பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் சிறார்களிடமும் பரவியுள்ளது. ஒவ்வொரு நாளும் 6.25 கோடி சிறார் புகைப்பிடிக்கிறார்கள் என அண்மை ஆய்வொன்று தெரிவிக்கிறது. பெரியவர்களையும் சேர்த்து, இந்தியாவில் ஏறத்தாழ 17 கோடியே 10 இலட்சத்து 94 ஆயிரத்து 600 பேர் தினமும் புகை பிடிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் சிகரெட், பீடி உற்பத்தி அதிகமாக உள்ளது.

இவ்வாறு, இந்தியாவில் புகைப்பிடிப்பவர்கள் பற்றி அமெரிக்க புற்றுநோய் கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வருங்கால சமூகம் இப்படி வழிமாறிப் போவதற்கு யார் காரணம் என்பதை திறந்த மனதுடன் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.