2018-06-23 16:01:00

பல்சமய உரையாடல் திறந்த மனப்பான்மையைக் கட்டியெழுப்பும்


ஜூன்,23,2018. "Emouna Fraternité Alumni" எனப்படும் ப்ரெஞ்ச் அமைப்பின் 22 பிரதிநிதிகளை, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு மதங்களின் உறுப்பினர்கள் மத்தியில் உடன்பிறப்பு உணர்வை வலுப்படுத்துவதற்கு இந்த அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளை ஊக்குவித்தார்.

உண்மையான உடன்பிறப்பு உணர்வை, சமரசத்தைத் தேடாத, மற்றவர்க்குத் திறந்த மனப்பான்மையில் இருப்பதில் மட்டுமே வாழ முடியும் என்றும், இது, வேற்றுமைகளில் பிறரைப் புரிந்துகொண்டு, மதித்து வாழும் என்றும், திருத்தந்தை Emouna அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

இப்பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அமைதி எனும் கொடை பொழியப்பட செபிப்பதாகவும், வரலாற்று மண்ணிலும், இவர்களின் மரபுகளிலும் நடப்பட்ட மரங்களாக, ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக இருக்க இயலும் எனவும், திருத்தந்தை அப்பிரதிநிதிகளிடம் கூறினார்.

2016ம் ஆண்டு செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்ட Emouna Fraternité Alumni அமைப்பு, நிறுவனங்கள், கடமைகள், ஒவ்வொரு மதத்தைப் பற்றிய அறிவு போன்றவற்றில் பயிற்சியளித்து வருகிறது. பாரிஸ் அரசியல் கல்வியியல் நிறுவனத்தின் பரிந்துரை மற்றும் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், பிரான்ஸ் நாட்டிலுள்ள பெரிய மதங்கள் உறுப்புகளாக உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.