2018-06-25 15:32:00

ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Cosgrove சந்திப்பு


ஜூன்,25,2018. ஆஸ்திரேலிய காமன்வெல்த்தின் ஆளுனர் Peter Cosgrove அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்தார், ஆஸ்திரேலிய ஆளுனர் Peter Cosgrove.

உலக அளவிலும், ஆஸ்திரேலியப் பகுதியிலும் புலம்பெயர்ந்தவர் நிலை, காலநிலை மாற்றம், ஆஸ்திரேலிய சமுதாயத்தில் திருஅவையின் பங்கு, நலிவடைந்த சிறார் மற்றும் ஏனையோரின் நிலை போன்ற தலைப்புகள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம்  கூறியது.  

ஆஸ்திரேலியாவின் சமூக வாழ்வு, பசிபிக் மற்றும் ஆசியப் பகுதியில் அமைதி போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம்  கூறியது.  

ஆஸ்திரேலியப் பிரதமரின் ஆலோசனையின்பேரில், இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் அவர்கள், ஆஸ்திரேலியாவில் அரசியின் பிரதிநிதியாக, காமன்வெல்த்தின் ஆளுனரை நியமிக்கின்றார். இந்த ஆளுனர் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் தலைவராக இருக்கின்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.