சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய காரித்தாஸ்

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் - RV

28/06/2018 16:04

ஜூன்.28,2018. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும், கேரளாவிலும் மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய காரித்தாஸ் அமைப்பு முழுவீச்சில் உதவிகள் செய்து வருகிறது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இப்பகுதிகளில் உள்ள 21 மாவட்டங்களின் 1064 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன என்றும், 6,50,000 மக்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரித்தாஸ் தன்னார்வத் தொண்டர்கள் வழியே இதுவரை 15,400க்கும் அதிகமான மக்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளோம் என்று, காரித்தாஸ் இயக்குனர் பால் மூஞ்செலி அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம், மணிப்பூர், கேரளா ஆகிய மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர், விவசாயக் கூலிகள் என்றும், ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

28/06/2018 16:04